[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

’ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்...’ - நடிகை சனாகான் காதல் உருக்கம்

sana-khan-finds-a-soulmate-in-choreographer-melvin-louis

நடிகை சனா கான், இந்திப் பட நடன இயக்குனரை காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தனது காதல் பற்றி சமூக வலைத்தளப்பக்கத்தில் உருக்கமாகவும் அவர் எழுதியுள்ளார்.

தமிழில், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உட்பட சில படங்களில் நடித்திருப்பவ ர்  இந்தி நடிகை சனா கான். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இந்தியில் அதிக பிரபலமானார். இந்நிலையில் அவர் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதுபற்றி அவர் எதுவும் தெரிவிக் காமல் இருந்தார். இந்நிலையில் அவர் காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். 

இருவரும் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒன்றாக பங்கேற்றனர். அப்போதிருந்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மெல்வினுடன், தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள் ளார் சனா கான். 

அதில் கேப்ஷனாக, ’’உன்னைச் சந்திக்கும் வரை இப்படி யாரையும் காதலிப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் உன்னி டம் கண்டதை, சிலர் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் உன் காதலில் நெகிழ்கிறேன். ஒவ்வொரு நாளும் உன்னிடம் இருந்து பல சிறந்த விஷயங்களைக் கற்கிறேன். நீ என்னைச் சிறந்தவளாக மாற்றியிருக்கிறாய். என் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. என் வாழ்க்கையில் நீ வந்ததற்காக, நான் அதிர்ஷ்டசாலி என்றே உணர்கிறேன். நான் இதுவரை ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறேன் என்றால் அது என் இதயத்தை உன்னிடம் கொடுத்ததுதான்’’ என்று உருகி உருகி காதலைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் காதல் பற்றி சனா கானிடம் கேட்டபோது, ‘’கடந்த செப்டம்பர் மாதம் மெல்வினும் நானும் இணைந்து நடன வீடியோ ஒன்றை உருவாக்கினோம். பின்னர் ஒரு நாள் டின்னருக்கு வெளியே சென்றோம். அதன்பிறகு தொடர்ந்து சந்திக்கத் தொடங் கினோம். அப்போது எங்கள் காதலை உணர்ந்துகொண்டோம். இதையடுத்து எங்களை பற்றி வரும் செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, காதலை அறிவித்துவிடுவது என்று முடிவு செய்தோம். இருவருடைய குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். விரைவில் திருமணம் பற்றி இரண்டு குடும்பத்தினரும் பேச இருக்கிறோம்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close