[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

’எப்படி வீடியோ எடுக்கலாம்?’ செல்போனை பறித்த சல்மான் கான் மீது புகார்!

salman-khan-snatches-journalist-s-phone-courts-another-row

சாலையில் சைக்கிள் ஓட்டி வந்ததை வீடியோ எடுத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து செல்போனை பறித்த நடிகர் சல்மான் கான் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். எங்கு படப்பிடிப்புக்குச் சென்றாலும் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சென்னையில், ஷூட்டிங்கிற்கு வந்தபோது கூட, வடபழனியில் ஜாலியாக சைக்கிளில் சுற்றியவர்.

கடந்த புதன்கிழமை மாலை, மும்பை ஜுஹூவில் இருந்து காந்திவிலி செல்லும் சாலையில், இந்தி பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் அசோக் ஷ்யாமல் பாண்டேவும் புகைப்படக்கலைஞர் சையத் இர்பானும் காரில் சென்று கொண்டிருந்தனர். 

4.40 மணியளவில் திடீரென்று சாலையை பார்த்தபோது, சூப்பர் ஸ்டார் சல்மான் கான், சைக்கிள் ஓட்டியபடி அருகில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பக்கமும் பாதுகாவலர்கள் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஆச்சரியமடைந்த பாண் டே, உடனே, சல்மானின் பாதுகாவலரிடம், தாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். அவர்கள் சரி என்றனர். 

இதையடுத்து சையத், செல்போனில் சல்மான் சைக்கிளில் செல்வதை வீடியோ எடுத்தார். இதைக் கண்ட நடிகர் சல்மான் கான், வீடியோ எடுக்கக் கூடாது என்று எச்சரித்தார். பிறகு, பாதுகாவலரிடம் ஏதோ சொன்னார். அவர்கள் இவர்கள் அருகில் வந்து வீடியோ எடுக்கக் கூடாது எனத் தள்ளினர். அனுமதி வாங்கித்தானே எடுக்கிறோம் என்று இவர்கள் கூறியதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நடிகர் சல்மான் கான், ’எப்படி வீடியோ எடுக்கலாம்?’ என்று திட்டிவிட்டு சையத் கையில் இருந்த செல்போனை பறித்துவிட்டுச் சென்றாராம். சிறிது நேரத்துக்குப் பிறகு அவரது பாதுகாவலர், போனை திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றார். 

இதையடுத்து போனை பறித்த சல்மான் கான் மீது, அந்தேரி மேற்கில் உள்ள டி.என் நகர் காவல் நிலையத்தில் பாண்டே புகார் செய்தார். சல்மான் தரப்பிலும் அனுமதியின்றி வீடியோ எடுத்தார்கள் என்று இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close