[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • BREAKING-NEWS இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது - கி.வீரமணி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

vijay-sethupathi-and-shruti-haasan-to-join-together-for-laabam

ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

விஜய்சேதுபதி நடிப்பில் 2015 ஆண்டு வெளியான திரைப்படம்  ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இதனை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் ஜனநாதன் இயக்கும் நான்காவது படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்துக்கு லாபம் என்றும் பெயரிட்டனர். 

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் இயக்குநர் ஜனநாதன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் ஸ்ருதிஹாசன். வில்லனாகப் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். 

முதல்கட்டமாக நடக்கவுள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் பங்குபெறும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும், தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதிக்கு கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. தற்போது இயக்குநர் மணிகண்டன் படத்திலும்,  சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். சிந்துபாத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் மலையாளம், தெலுங்கிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close