[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

மோடி பற்றிய வெப்சீரிஸ்-க்கும் தடை!

ec-bans-online-streaming-of-web-series-on-modi

பிரதமர் மோடி பற்றிய திரைப்படத்துக்குத் தடைவிதித்துள்ள தேர்தல் ஆணையம்,அவரது வாழ்க்கையை சொல்லும் வெப்சீரிஸ்-க்கும் தடைவிதித்துள்ளது. 

’மோடி - ஜேர்னி ஆஃப் ஏ காமன்மேன்’ என்ற தலைப்பில், மோடியின் வாழ்க்கை கதை, செல்போன் நிறுவன ஆப் ஒன்றுக் காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் மகேஷ் தாகூர், மோடியாக நடித்துள்ளார். உமேஷ் சுக்லா இயக்கியுள்ளார். இவர், அக்‌ஷய் குமார் நடித்த ’ஓ மை காட்’, அபிஷேக் பச்சன் நடித்த ஆல் இஸ் வெல், அமிதாப் பச்சன் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களை இயக்கியவர். 

10 பகுதிகள் கொண்ட வெப் சீரிஸ்-க்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.  முதல் ஐந்து பாகங்கள் வெளியான நிலையில், அடுத்தப் பாகங்களை தேர்தலுக்கு பின்பே வெளியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை யடுத்து தேர்தல் கமிஷன், இந்த வெப் சீரிஸ்-க்கு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே விவேக் ஓபராய் நடித்து வெளியாக இருந்த பிரதமர் மோடி பற்றிய படத்தையும் தேர்தல் முடியும் வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close