[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

படப்பிடிப்பில் விபத்து: ‘உரி’ ஹீரோவுக்கு 13 தையல்!

vicky-kaushal-badly-injured-on-movie-sets

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ’உரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ பட ஹீரோ விக்கி கவுஷல் படுகாயமடைந்தார். அவர் கன்னத்தில் 13 தையல் போடப்பட்டுள்ளது.

அனுராக் காஷ்யப் இயக்கிய, ’கேங்ஸ் ஆஃப் வாஷிபூர்’, ’பாம்பே வெல்வட்’, ’சஞ்சு’, ’உரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ உட்பட சில படங்களில் நடித்த வர் விக்கி கவுஷல். இவர் இப்போது ஹாரர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை பானு பிரதாப் சிங் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங், குஜராத்தில் உள்ள அலாங் (Alang)-கில் நடந்து வருகிறது. 

கடற்கரை நகரமான இங்கு கப்பல்களை உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. பயணத்துக்குப் பயனில்லாத கப்பல்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, கப்பலின் பாகங்களை தனித்தனியாகப் பிரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இங்கு, இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சி, கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது. 

உடைந்த கப்பல் ஒன்றின் மேல் வேகமாக ஓடி, ஹீரோ விக்கி கதவைத் திறக்க வேண்டும். இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, கதவு திடீரென் று அவர் மீது விழுந்தது. இதில் அவர் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந் தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கன்னத்தில் 13 தையல் போட்டப்பட்டது. பின்னர் அவர் மும்பை கொண்டு வரப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close