[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சின்மயிக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர் ராஜன் - வைரலாகும் ‘மீடூ’ விவகாரம்

producer-k-rajan-threatens-chinmayi-what-pa-ranjith-did-next-is-goals-for-kollywood

ராஜனின் சர்ச்சையான பேச்சினால் ‘மீடூ’ விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. 

கடந்த சில தினங்கள் முன்பு ‘பற’ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பல திரை நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பாடல் வெளியீட்டு விழா சர்ச்சை களமாக மாறியது. தயாரிப்பாளர் ராஜன் மேடையிலேயே பாடகி சின்மயிக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘மீடூ’ இயக்கத்தை குறிவைத்தும் சின்மயியை குறிவைத்தும் அவர் தனிநபர் தாக்குதல் நடத்தினார். 

நிகழ்ச்சியில் ராஜன் பேசும் போது, “எப்போதோ 15 வருடங்களுக்கு முன்னால் நடந்ததாம். அதை இப்போது சொல்வதன் நோக்கம்தான் என்ன? அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும். ஏன் கவிஞர் வைரமுத்துவை அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள்? நல்லது இல்லை அம்மா. எங்கள் ஏரியா பெண்கள் சேர்ந்தால் உன்னை நாஸ்தி ஆக்கிவிடுவார்கள். எந்தப் பெருமைக்குரியவர்களையும் சீப் பப்ளிசிட்டிக்காக அவர்களை பாழாக்காதீர்கள்? அவர்கள் இந்தப் புகழை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். பேரை கெடுக்காதீர்கள்? அதை போய் சின்ன ஆசைக்காக நீங்கள் சிதைத்தால், நான் சில ஆட்களை வைத்திருக்கிறேன்.  உன்னை சிதைப்பதற்கு..” என்று பாடகி சின்மயியை ஒருமையில் பேசி எச்சரித்தார். 

அடுத்து பேச வந்த இயக்குநர் ரஞ்சித், இவரது பேச்சுக்கு மேடையிலேயே தனது கண்டனத்தை பதிய வைத்தார். அவர் பேசும் போது, “பெண்களின் குற்றச்சாட்டை மட்டும் நாம் பார்க்கக் கூடாது. சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிற ஒரு விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை இல்லை என்று சொல்ல முடியாது. இதை நாம் வெளிப்படையாக ஏற்று கொள்ள வேண்டும். ஸ்ரீரெட்டி மற்றும் சிலரின் புகாரை வெறும் குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளாமல்,  அந்த பிரச்னைகளை ஆராய்வதன் மூலம்தான் அந்தப் புகார் உண்மையா இல்லையா என்ற அடுத்த கட்டத்திற்கு நாம் போக முடியும். ஒரு பெண் புகார் சொன்ன உடனேயே அவரை ஒரு குற்றவாளியாக மாற்றுவது மிகமிக தவறு. நான் அதை எதிர்க்கிறேன்” என்றார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சின்மயி, “சிதைக்க ஆள் எல்லாம் வச்சி இருக்காராமே? பயப்படுணுமா?’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்நிலையில் சில மாதங்களாக மறைந்து போய் இருந்த ‘மீடூ’ விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜனின் பேச்சை கண்டித்து பலரும் கருத்திட்டு வருகின்றனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close