[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

போனி கபூர் மகனைத் திருமணம் செய்கிறேனா? மறுக்கிறார் மலைக்கா!

there-is-no-truth-to-these-silly-speculations-malaika-arora

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் இந்தி நடிகருமான அர்ஜூன் கபூரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வரும் தகவலை நடிகை மலைக்கா அரோரா மறுத்துள்ளார். 

பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில்  ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலுக்கு ஆடியவர். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.

நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, விவாகரத்து பெற்றனர். மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது கிசு கிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அர்ஜுன் கபூர், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 45. அர்ஜுனுக்கு வயது 33.

இந்த காதல் குறித்து இருவருமே இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி இவர்கள் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்றைய தினம் வேறு வேலை எதையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக, கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதுபற்றி மலைக்காவிடம் கேட்டபோது, ‘’ எங்கள் திருமணம் பற்றிய செய்தி வேடிக்கையான ஒன்று. அதில் உண்மையில்லை. வதந்திதான். இதுபற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். 

காதலில் விழுந்த நடிகைகள் யார்தான் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள், ரசிகர்கள். சமீபத்தில், நடிகை அனு ஷ்கா சர்மா, தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகளும் தங்கள் காதலை கடைசி வரை வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்தனர். பிறகு தங் கள் காதலருடன் திருமணம் செய்துகொண்டனர். அந்த லிஸ்டில் மலைக்காவும் இருப்பார் என்கிறார்கள்!
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close