[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பிரதமர் மோடி படத்துக்கான தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

makers-of-biopic-pm-narendra-modi-move-the-supreme-court

’பிஎம் நரேந்திர மோடி’ படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. மேரி கோம், சர்ப்ஜித் ஆகிய வாழ்க்கைக் கதைகளை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜீத்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மனோஜ் ஜோஷி, அமித் ஷாவாகவும் ஷரினா வகாப் மோடியின் அம்மாவாகவும் பர்கா பிஸ்ட் செப்குப்தா மோடியின் மனைவியாகவும் நடித்துள்ளனர். 

இந்தப் படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆதாயத்துக்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இந்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை படம் மீறுவதாக கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதையடுத்து அந்தப் படத்தை இப்போது வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் படத் தயாரிப்பு தரப்பில் இன்று வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை 15 ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close