[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

’மெர்சல்’ ரீமேக்கில் நடிக்கிறார் ஷாரூக் கான்?

shah-rukh-khan-in-talks-for-mersal-remake

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், ’மெர்சல்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. 

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உட்பட பலர் நடித்த படம், ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகு மான் இசை அமைத்திருந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழில் ஹிட்டானது.

இதையடுத்து, விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கி வருகிறார் அட்லி. இதில் நயன்தாரா ஹீரோயின். இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை, சிஎஸ்கே- கொல்கத்தா ஐபிஎல் போட்டி நடந்தபோது, ஷாரூக் கானைச் சந்தித்தார் அட்லீ.

அப்போது தற்போது விஜய் நடிப்பில், தான் இயக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க, ஷாரூக் கானிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதோடு, ’மெர்சல்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.இதில், ’மெர்சல்’ கதையை கேட்ட ஷாரூக் கான், அதில் நடிக்க ஆர்வம் காட்டியதாகவும் இந்திக்கு ஏற்ப சில மாற்றங்களை கதையில் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.

‘’ஷாரூக் கான் தற்போது சில ஸ்கிரிப்ட்களை வாசித்து வருகிறார். அவர் அடுத்து எந்தப் படத்தில் நடிப்பார் என்பதை உடனடியாகச் சொல்ல இயலாது’’ என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஷாரூக் கான், அடுத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close