[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

மும்பையில் தொடங்கியது ரஜினியின் "தர்பார்" படப்பிடிப்பு

darbar-film-shooting-starts-with-pooja-in-mumbai

‘தர்பார்’படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் இன்று தொடங்கியது.

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப் படத்திற்கு  ‘தர்பார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் நேற்று வெளியானது. அத்துடன்  சமூக வலைத்தளங்களில் இது வைரலானது.

இந்நிலையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் “தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பூஜையுடன் தொடங்கியது” எனப் பதிவிட்டுள்ளது.

முன்னதாக நேற்று வெளியான  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர், தர்பார் முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக இருந்தது. மேலும் மும்பையில் நடக்கும் போலீஸ் ஸ்டோரியாக தர்பார் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  தர்பார் திரைப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் ஆங்கிலத்தில் வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில் "நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா இருக்கிறத நீயே முடிவு பண்ணிக்கோ" என இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரண்டு வேடங்களில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close