[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

வெளியானது ரஜினியின் 'தர்பார்' போஸ்டர் 

first-look-poster-of-rajinikanth-s-darbar

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் 167-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது

நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியானது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

ரஜினியின் 167வது படமாக இது உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ’பேட்ட’ படத்துக்குப் பிறகு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் 80களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளத்தாகவும், நாளை முதல் மும்பையில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக போஸ்டர் அமைந்துள்ளது.

மும்பையில் நடக்கும் போலீஸ் ஸ்டோரியாக தர்பார் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  தர்பார் திரைப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் ஆங்கிலத்தில்  வாசகம் இடம் பெற்றுள்ளது அதில் "நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா இருக்கிறத நீயே முடிவு பண்ணிக்கோ" என இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரண்டு வேடங்களில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close