[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ரஜினியின் மகளாக "பாபநாசம்" நிவேதா தாமஸ் ?

nivetha-thomas-to-play-rajinikanth-s-daughter

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியானது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

ரஜினியின் 166வது படமாக இது உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ’பேட்ட’ படத்துக்குப் பிறகு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் 80களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளத்தாகவும், ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் போராளி, ஜில்லா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close