[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ராஜமவுலி படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை திடீர் விலகல்

british-actress-daisy-edgar-jones-walks-out-of-ss-rajamouli-s-rrr

ராஜமவுலி இயக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் விலகியுள்ளார்.

'பாகுபலி' மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்ற, ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில்  தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றன்ர்.

(ஆலியா படம்)

தற்காலிகமாக ’ஆர்ஆர்ஆர்’ (RRR )என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் கதை, சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டுள்ளது. ராஜ மவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார். 

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் ஷூட்டிங், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் பிரீட்டீஷ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார். அவர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக இதில் நடிக்கிறார் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் படத்தில் நடிக்கவில்லை என்று ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. அவர் எதற்காக நடிக்கவில்லை என்ற காரணத்தைப் படக்குழு தெரிவிக்கவில்லை.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close