[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

விவாகரத்து வதந்திக்குப் பின் பிரியாங்கா வெளியிட்ட ’ஜோ சிஸ்டர்ஸ்’ புகைப்படம்!

priyanka-shares-new-pics-with-sophie-and-sister-in-law-danielle-calls-them-her-j-sisters

விவாகரத்து வதந்திக்குப் பின் நடிகை பிரியாங்கா சோப்ரா வெளியிட்டுள்ள ’ஜோ சிஸ்டர்ஸ்’ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை பிரியங்கா சோப்ரா, பிரபல ஹாலிவுட் பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனாஸை காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந் தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். இதில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் , தொழில் அதிபர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK magazine) என்ற லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட் டது. திருமணத்துக்குப் பின் இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றும் பல விஷயங்களில் இருவருக்கும் பிரச்னை என்றும் இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டது. ஆனால், இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்காவும் நிக் ஜோனாஸூம் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, ’J sisters’ (ஜோனாஸ் சிஸ்டர்ஸ்) என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு கீழே, ’கடைசியாக ஜோ சிஸ்டர்ஸ் ஒன்று சேர்ந்துவிட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் பிரியங்கா, (நிக் ஜோனாஸ் மனைவி). நிக்-கின் சகோதரர் ஜோ ஜோனாஸின் வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னர், மற்றொரு சகோதரரான கெவின் ஜோனாஸின் மனைவி டேனியல்லே டெலிசா ஆகியோர் சேர்ந்து இருக்கின்றனர். இந்தப் புகைப்படத்துக்கு கீழே, இவர்களின் மாமியார் டெனி ஸ், வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close