[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் மகேந்திரன்” - நடிகர் ரஜினிகாந்த்

actor-rajinikanth-shares-his-memories-with-director-mahendran

என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் மகேந்திரன் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் இயக்குநர் மகேந்திரன் குறித்து தன் நினைவுகளை பகிர்ந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் '' எனக்கும் மகேந்திரனுக்கும் இடையேயான நட்பு சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஆழமான நட்பு. நடிப்பில் எனக்கு புதிய பரிமாணத்தை கற்றுக்கொடுத்தவர் மகேந்திரன். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர்.

முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் என்னை பாராட்டினார். அதற்கு சொந்தக்காரர் இயக்குநர் மகேந்திரன் தான். சினிமாவிலும், வாழ்க்கையிலும் யாருக்காகவும் தன்னுடைய சுய மரியாதையை விட்டுக்கொடுக்காதவர். 

இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கும் மகேந்திரன் ஒரு முன்னுதாரணம். அவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. ஆனாலும் தமிழ் சினிமா இருக்கும் வரை மகேந்திரனுக்கென்று ஒரு இடம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

20க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதி முடித்த மகேந்திரனுக்கு இயக்குநராக முதல் படம் முள்ளும் மலரும் ஆகும். இந்தப் படம் ரஜினிக்கும் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. தன்னுடைய 12 படங்களில் அதிகபட்சமாக ரஜினியை வைத்து மூன்று படங்களை இயக்குனர் மகேந்திரன் இயக்கியுள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close