[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்!

amy-jackson-announces-pregnancy-in-adorable-post

நடிகை எமி ஜாக்சன் திருமணத்துக்கு முன்பே தாய்மை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், 'மதராச பட்டினம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

 இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்த இவர், ஜார்ஜ் பனயிட்டோ (George Panayiotou) என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஆண்ட்ரீஸ் பனயிட்டோவின் மகன். இவர்களுக்கு பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு அன்று இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

இந்நிலையில் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள் ளார். தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ’’தாய்மையடைந்திருக்கிற இந்த தருணத்தை என் வீட்டு மாடியில் நின்று சத்தமாகச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.

இந்த உலகத்தில் எதையும் விட, உன் மீதுதான் தூய்மையான, நேர்மையான காதல் உள்ளது. எங்கள் குழந்தையை பார்க்க, காத்திருக்க முடிய வில்லை” என்று கூறியுள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close