[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

வாடகை வீடு பிரச்னை: ’கே.எஜி.எஃப்’ ஹீரோவுக்கு நீதிமன்றம் உத்தரவு

karnataka-hc-ordered-actor-yash-to-vacate-disputed-property-by-2-months

நடிகர் யஷ், மே 31 ஆம் தேதிக்குள் தற்போது வசிக்கும் வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப்.’ படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் கன்னட நடிகர் யஷ். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவர் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் வாடகை வீட்டில் அம்மா புஷ்பாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் வாடகை மாதம் ரூ.40 ஆயிரம். இந்நிலையில் யஷ், பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பாகவும் அதை செலுத்திவிட்டு வீட்டை காலி செய் யும்படியும் வீட்டின் உரிமையாளர் கூறினார். 

இது தொடர்பாக, வீட்டு உரிமையாளருக்கும், நடிகர் யஷ்-சுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர், கர்நாடக நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளைக்குள்) வீட்டைக் காலி செய்ய ஏற்கனவே உத் தரவிட்டது. 

இந்நிலையில் நடிகர் யஷ்-சின் அம்மா புஷ்பா, நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ’ஹாசனில் சொந்தமாக வீடு கட்டும் பணியில் இருக்கிறோம். அந்த வேலை முடிய ஆறு மாதங்கள் ஆகும். அதுவரை இங்கு வசிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியி ருந்தார். இதற்கு வீட்டு உரிமையாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மாத கால அவகாசம் வழங்கி, மே மாதம் 31 ஆம் தேதிக் குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close