[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

’ராம் கி ஜென்மபூமி’ படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ram-temple-movie-won-t-stall-mediation-says-sc

நாளை ரிலீஸ் ஆக இருக்கும் ’ராம் கி ஜென்மப்பூமி’ படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராம ஜென்மப்பூமி பிரச்னையை மையமாக வைத்து ’ராம் கி ஜென்மப்பூமி’ என்ற பெயரில் இந்தி படம் உருவாகியுள்ளது. சனோஜ் மிஸ்ரா இயக்கி யுள்ள இந்தப் படத்தில் கோவிந்த் நம்தியோ, மனோஜ் ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் வெளியானபோது, படத்தை வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளர் வாசிம் ரிஸ்விக்கு கொலை மிரட்டல் வந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தை நாளை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் படத்துக்குத் தடைவிதிக்கக் கோரியும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்க றிஞர் லில்லி தாமஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார். ‘இந்தப் படம் இப்போது வெளியானால், ராம ஜென்மபூமி குறித்து நடந்து வரும் மத்தியஸ் தர் குழு விசாரணை பாதிக்கப்படும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்காத உச்சநீதிமன்றம், மத்தியஸ்தர் குழு விசாரணைக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும் கூறி, வழக்கு விசாரணையை 2 வார காலத்துக்குத் தள்ளி வைத்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close