[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு இவ்வளவு கோடியா?

kangana-ranaut-charging-a-whopping-rs-24-crore-for-jayalalithaa-biopic

ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடிக்க, நடிகை கங்கனா ரனவ்த்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. அவரது வாழ்க்கைக் கதையை மிஷ்கினிடம் உதவி இயக் குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இயக்குவதாக அறிவித்திருந்தனர். பாரதிராஜாவும் அவர் வாழ்க்கை கதையை படமாக் குவதாகக் கூறப்பட்டது. பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதைக்கு ’த அயர்ன் லேடி’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள் ளது. அதில் ஜெயலலிதாவாக, நித்யா மேனன் நடிக்கிறார். வரலட்சுமி, சசிகலாவாக நடிக்கிறார். 

இந்நிலையில் விஜய் இயக்கும் ’தலைவி’ படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்தி நடிகைகள் வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் கங்கனா ரனவ்த் நடிப்பது உறுதியாகினது. இவர் தமிழில் ஏற்கனவே, ஜெயம் ரவி ஜோடியாக ’தாம் தூம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதையை ’பாகுபலி’ கதாசிரியரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

படத்தை இயக்கும் விஜய் கூறும்போது, ‘’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவின் முக்கியமான தலைவர். அவர் வாழ்க்கைக் கதையை ’தலைவி’ என்ற பெயரில் இயக்குவது பெருமையானது. ஜெயலலிதாவாக, கங்கனா ரனவ்த் நடிப்பது இன்னும் பெருமையான விஷ யம்’’ என்றார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி மீடியா நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தியில் படத்தைத் தயாரிக்கிறது. 

இந்தப் படத்தில் நடிக்க கங்கனாவுக்கு ரூ.24 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தி நடிகை ஒருவர் தென் னிந்திய படத்தில் நடிக்க வாங்கும் அதிகப்பட்ச சம்பளம் இது. ‘படம் இந்தியா முழுவதும் சென்று சேர கங்கனாவின் புகழ் உதவும் என்று படக் குழு நம்பியது. இதனால் அந்த சம்பளத்தை தர தயாரிப்பாளர் சம்மதித்தார். ஒப்பந்தம் முடிந்துவிட்டது’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கங்கனா, இப்போது அஸ்வினி ஐயர் திவாரி இயக்கும் ’பங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு ஜெயலலிதா வின் வாழ்க்கை கதையில் நடிக்கத் தொடங்குகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close