[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

’தலைவி’ படத்தில் ’ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா: இயக்குனர் விஜய் தகவல்

actress-kangana-ranaut-to-play-jayalalithaa-in-her-biopic

விஜய் இயக்கத்தில் உருவாகும் ’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக, நடிகை கங்கனா ரனவ்த் நடிக்கிறார்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களை எடுப்பது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கைக் கதையை மூன்று பேர் தனித் தனிப்படமாக இயக்குகின்றனர். மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இயக்குவதாக அறிவித்திருந்தனர். பாரதிராஜாவும் அவர் வாழ்க்கை கதை யை படமாக்குவதாகக் கூறப்பட்டது.

பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதைக்கு ’த அயர்ன் லேடி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா வாக, நித்யா மேனன் நடிக்கிறார். வரலட்சுமி சசிகலாவாக நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இந்நிலையில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்தி நடிகை வித்யா பாலனிடமு ம் கேட்கப்பட்டது. இந்நிலையில் கங்கனா ரனவ்த் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர் தமிழில் ஏற்கனவே, ஜெயம் ரவி ஜோடியாக ’தாம்
தூம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதையை ’பாகுபலி’ கதாசிரியரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவுமான விஜ யேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, ‘’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவின் முக்கியமான தலைவர். அவர் வாழ்க்கைக் கதையை இயக்குவது மிகுந்த பொறுப்புணர்வு  கொண்டது. அதோடு பெருமையானதும் கூட. அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஜெயலலிதாவாக, கங்கனா ரனவ்த் நடிப்பது பெருமையான விஷயம்’’ என்றார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி மீடியா நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தியில் படத்தைத் தயாரிக் கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close