[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

சுதந்திரத்துக்கு முன்பே ஹாலிவுட்டை கலக்கிய இந்தியர்

the-south-indian-mowgli-who-conquered-hollywood-in-the-40s

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தியர் ஒருவர் ஹாலிவுட் உலகைக் கலக்கியுள்ளது நம்மில் பலருக்குத் தெரியாது.

யானையுடன் நெருக்கமாகப் பழகும் சிறுவன் குறித்து படம் ஒன்றை எடுக்க முயற்சித்த ஹாலிவுட் இயக்குனர்கள் ராபர்ட் ஃப்ளாகெர்டி மற்றும் ஜோல்டன் கொர்டா ஆகியோர், மைசூர் அரணமனையில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வந்த செலார் ஷேக்-கைக் கண்டுபிடித்தனர்.

யானைகளுடன் நெருங்கிப் பழகும் சிறுவன் ஷேக்கைக் கண்டு வியந்த அவர்கள், ’டு மை எலபெண்ட்’ என்ற பெயரில் அவரை வைத்து படம் எடுத்தனர். ஷேக்கின் நடிப்பைக் கண்டு வியந்த அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கொர்டா, ஷேக்குக்கு புதிய பெயர் சூட்ட எண்ணி, சாபு என்ற என்று பெயரிட்டார்.

அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததுடன், வெனிஸ் திரைப்பட விழாவில் பல விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் சாபுவின் நடிப்பைப் பாராட்டிய அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ், நடிப்பு சாபுவுடன் பிறந்தது என்று புகழாரம் சூட்டியது. சாபுவின் நடிப்பைப் பாரட்டிய அன்றைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்து கவுரவித்தார். அதன்பிறகு சுமார் 25 படங்களில் நடித்த சாபு, கடந்த 1967-ல் தனது 39 வயதிலேயே காலமானார். டிஸ்னி நிறுவனத்தின் ‘தி ஜங்கிள் புக்’ வெளிவருவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே சாபு நடித்த ஜங்கிள் புக் படம் வெளிவந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close