[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“ஐ லவ் யு அனிஷா” - நிச்சயதார்த்த படங்களை வெளியிட்ட விஷால்

vishal-shared-engagement-photos-on-twitter-page

நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் பகிர்ந்து கொண்டுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தனது வாழ்க்கை துணை யார் என அறிவித்தார் விஷால். அதில் அவர் தனது திருமணம் எப்போது? எங்கே நடைபெறவுள்ளது என்பதை பின்பு அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார்.

 இந்நிலையில் இன்று மாலை விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அலிஷாக்கும் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இதில் கலந்து கொள்வதற்கு இரு வீட்டாருக்குமிடையே மிக நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இது சம்பந்தமாக விஷாலின் நெருக்கமான வட்டாரத்தினர், “இந்த நிச்சயதார்த்தம் முன்கூட்டியே திட்டமிடப்படி நடைபெறுகிறது. அதற்காக ஹைதராபாத்திலுள்ள மிக பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியை ஒப்பந்தம் செய்துள்ளோம். மிக குறைவான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மிக உயர்தர மதிய உணவு விருந்து நடைபெறுகிறது. விஷால், அனிஷா இருவரது வீட்டாரும் இவர்களது திருமண நாளை இன்று அறிவிக்கவுள்ளனா உள்ளனர்” எனக் கூறியிருந்தனர். 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் விஷால். அதில், “இந்தப் புகைப்படங்களே எல்லா விஷயத்தையும் கூறிவிடும். அலிதா என் வருங்கால மனைவி. மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஐ லவ் யு அனிஷா” என்று கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close