[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

சாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா

parineeti-chopra-replaces-shraddha-kapoor-in-the-saina-nehwal

சாய்னா நேவாலின் வாழ்க்கை கதையை கொண்ட படத்தில் இருந்து நடிகை ஸ்ரத்தா கபூர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பரினீதி சோப்ரா நடிக்கிறார்.

பேட்மின்டன் சாம்பியனான சாய்னா நோவலின் வாழ்க்கை கதை சினிமாவாகி வருகிறது. இந்தப் படத்தில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர், சாய்னா கேரக்டரில் நடிக்க இருந்தார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. ’பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் படப் பிடிப்பை தொடங்கி வைத்தார். ’சாஹோ’ படத்தில் ஷ்ரத்தா நடித்து வருவதால் அந்த நட்பின் அடிப்படையில் ஷூட்டிங்கை அவர் தொடங்கி வைத்தார். 

(பரினீதி சோப்ரா)

அமோல் குப்தே இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, ஸ்ரத்தாவுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஓய்வெ டுக்கச் சென்றார். இதனால் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடக்க இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஸ்ரத்தா விலகியுள்ளார். ஷூட்டிங் செட்யூல் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டதால், இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சாய்னா நேவால் கேரக்டரில் பரினீதி சோப்ரா நடிக்கிறார். 

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் புஷன் கூறும்போது, ‘’இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்து அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட் டுள்ளோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக ஸ்ரத்தாவால் இதில் தொடர முடியவில்லை. இதனால் அவர் விலகி கொள்வதாகக் கூறினார். அவருக்கு பதில் பரினீதி நடிக்கிறார்’’ என்றார்.

இதில் நடிப்பது பற்றி பரினீதி கூறும்போது, ‘’இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது பெருமை. படத்துக்காக பேட்மின்டன் பயிற்சி எடுக்க இருக்கிறேன். இதன் ஷூட்டிங்கை ஆவலாக எதிர்பார்க்கிறேன்’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close