[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'ஹீரோ'!

the-title-of-the-sivakarthikeyan-s-15th-film-is-hero

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு 'ஹீரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மித்ரன். சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் மித்ரனுடன் சிவகார்த்திகேயன் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆகிறார்

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு பூஜை போடப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். பலரும் அப்புகைப்படங்களை பகிர்ந்து 'ஹீரோ' படக்குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close