[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்த காமெடி நடிகர்!

comedy-actor-ali-joins-ysrc-party

காமெடி நடிகர் ஆலி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். 

தமிழில், விஜய்யின் புலி, ஆர்யாவின் சேட்டை, எஸ்.ஜே.சூர்யாவின் நியூ, அனுஷ்காவின் ’இஞ்சி இடுப்பழகி’ படங்களில் நடித்தவர், தெலுங்கு காமெடி நடிகர் ஆலி. கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

இவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை இன்று சந்தித்த அவர், அக்கட்சியில் சேர்ந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆலி, ’’ஆந்திர மாநில மக்கள் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் கட்சியில் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. தேர்தல் வெற்றிக்காக பிரசாரம் செய்வேன்’’ என்று தெரிவித்தார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இதனால் அந்தக் கட்சியின் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் திடீரென்று இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

சமீபத்தில் நடிகை ஜெயசுதாவும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close