[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது தயாரிப்பாளர்கள் புகார்

producers-association-complaint-against-vishal-about-ilaiyaraja-function

திட்டமிட்டு இளையராஜா நிகழ்ச்சியை பயன்படுத்தி விஷால் முறைகேடு செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்றதது. சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிதி திரட்டவே இளையராஜா நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்பட்டதாகவும் விஷால் தரப்பினர் கூறிவந்தனர். 

இந்நிலையில் திட்டமிட்டு இளையராஜா நிகழ்ச்சியை பயன்படுத்தி விஷால் முறைகேடு செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருபகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களான எஸ்வி சேகர், கே.ராஜன் ஆகியோர் திநகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எஸ்வி சேகர், இளையராஜாவை வைத்து நடத்திய இசை நிகழ்ச்சியில் சுமார் 3 கோடி ரூபாய்க்கான பணியை அவரது நண்பர்களான ரமணா, நந்தாவிற்கு விஷால் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தயாரிப்பாளர் சங்கத்திலுள்ள பணத்தை அதன் தலைவர் விஷால் எடுத்து செலவு செய்தது திருட்டுக்கு சமமான செயல் என்று குற்றஞ்சாட்டினார். இதுவரை சுமார் 8 கோடி ரூபாயை விஷால் எந்தவித முறையான கணக்குகளையும் காட்டாமல் செலவு செய்துள்ளதாகவும் விஷால் பொதுக் குழுவை கூட்டாமலும் சங்க நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பதும் இல்லை எனவும் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ராஜன், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்த பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டு, சிறுப்பட தயாரிப்பாளர்களை நடுதெருவில் நிறுத்திவிட்டார் விஷால் என்று தெரிவித்தார். மேலும், “3 கோடி ஊதியம் கொடுத்தது எதற்காக என்றும், பாரட்டுவிழாவுக்கு எதற்காக ஊதியம் கொடுத்து அழைத்துவரவேண்டும். விஷாலை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் தற்போது நடுத்தெருவில் இருப்பதாக தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்தார். செயற்குழு உறுப்பினரான கெளதமேனன், பிரகாஷ்ராஜ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரவில்லை. விஷால் வேகமானவர் ஆனால் விவேகமானவர் இல்லை. செயற்குழுவில் எங்களை பங்குபெற விஷால் விடுவதில்லை” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close