[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பாகுபலிக்கு சவால் விடும் சுந்தர்.சி.

sundar-c-to-direct-a-historical-flick

மெகா பட்ஜெட்டில் சரித்திரப்படம் எடுக்க இயக்குநர் சுந்தர்.சி. திட்டமிட்டுள்ளார்.

சரித்திரகாலத்தை பின்னணியாகக் கொண்டு ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயராகும் இந்த படத்துக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஹீரோவைப் புக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சூர்யா மற்றும் மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல, ஒளிப்பதிவாளர் திரு, கலைஇயக்குனர் சாபு சிரில் மற்றும் பாகுபலி படத்துக்கு கிராபிக்ஸ் வேலைகளை மேற்கொண்ட கமலக் கண்ணன் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக இது அமையும் என்பதால், மிகப்பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் பாகுபலி, மகதீரா படங்களுக்கு சவால் விடும் வகையில் அமையும் என்று கோலிவுட் வட்டாரம் இப்போதே கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close