[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

“நித்யாவை செயல்பட வைப்பது எஸ்.ஐ. மனோஜ்தான்” - தாடி பாலாஜி

balaji-byte-against-nithya-and-s-i-manoj

 

என் குடும்பத்தை பாழாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமாரை போலீஸ் கமிஷனர் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த பாலாஜி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தனது மனைவி மகளுடன் சேர்ந்தார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாடி பாலாஜியின் மீது அவரது மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தாடி பாலாஜி தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என் மன உளைச்சலுக்கு உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் காரணம். என் குடும்பத்தை பாழாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமாரை போலீஸ் கமிஷனர் சஸ்பெண்டு செய்ய வேண்டும். என் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய நான் தயார். மகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். என் மகளின் படிப்பை செலவை நானே பார்த்து கொள்கிறேன். என் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் நித்யா. என் குழந்தையை பார்க்க விடவில்லை. 

நித்யா தேர்தலில் நிற்பேன் என்று சொல்கிறார். முதலில் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தை பார்க்க முடியாத நித்யாவுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும். அரசியலை பற்றி நித்யாவுக்கு என்ன தெரியும்? அவர் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ள அவர் என்ன முதலமைச்சர் வேட்பாளராகவா நிற்கிறார்? என் வேலை காரணமாக நான் பிஸியாக இருப்பதால் அந்த சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்தி கொண்டார். அதை கேட்டது தவறா? 

நித்யாவால் பெண்கள் அமைப்புக்கு கேவலம். நித்யாவை செயல்பட வைப்பது மனோஜ் தான். என்னுடை குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விஜய் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை. நித்யா பிக்பாஸில் செய்தது அனைத்துமே நடிப்பு. பிக்பாஸ் செட்டிலிருந்து வந்து நான் என் அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்க செல்லவே இல்லை.  நித்யா சொல்வது அனைத்துமே பொய். 

பணதேவைக்காக மட்டுமே என்னிடம் நித்யா பேசினார். என் பிரச்சினை தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும். குழந்தையின் படிப்பை கவனிக்க கூறினார். நான் என்ன செய்தாலும் கமலுக்கு தெரியும். அவரிடம் சொல்லி விட்டு தான் செய்தியாளர்களை சந்திக்க வந்தேன். நித்யா எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு இருந்தால் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close