[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

எகிப்து திரைப்படத்தின் ரீ மேக்கில் அஜித்?

ajith-to-act-in-an-international-movie-remake

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் ஐந்தாவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'விஸ்வாசம்'' படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் திரைப்படத்தை  ’சதுரங்கவேட்டை, ’தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய, வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரங், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்க ராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

தற்போது படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அஜித் பிறந்த நாளான மே1ம் தேதி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இயக்குநர் சிவா இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் எகிப்து நாட்டு திரைப்படமான ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர் (HEPTA THE LAST LECTURE) என்ற படத்தின் தழுவல் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில் அஜித்தை சிவா மீண்டும் இயக்குகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close