[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம், 'கிரீன் புக்', ‘ரோமா’வுக்கு 3 விருது!

oscars-2019-green-book-gets-best-film-award

’கிரீன் புக்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பத்து விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’ரோமா’ படத்து மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. 

ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால் பி தியேட்டரில் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. முன்னணி ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால்  தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடந்தது.

(மஹர்ஷாலா அலி)

91-வது ஆஸ்கர் விருதுக்கு, ’தி ஃபேவரைட்’ மற்றும் 'ரோமா' படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் ’ரோமா’வுக்கு 3 விருதுகள் கிடைத்தன. வசூலில் சாதனை படத்தை ’பிளாக் பாந்தர்’ படத்துக்கும் சிறந்த ஆடை வடிவமைப்பு, பின்னணி இசை, தயாரிப்பு வடிவ மைப்பு ஆகிய பிரிவுகளில் 3 விருதுகள் கிடைத்தன. ’கிரீன் புக்’ படத்துக்கு சிறந்த படம், சிறந்த துணை நடிகர், ஒரிஜினல் திரைக்கதை ஆகிய மூ ன்று விருதுகள் கிடைத்தன. போமேனியன் ராப்ஸோடி (Bohemian Rhapsody) படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்தன. 

(ரெஜினா கிங்)

விருது விவரம்:

. சிறந்த படம்: கிரீன் புக்
. சிறந்த நடிகர்: ராமி மலேக் (Rami Malek ) போமேனியன் ராப்ஸோடி படத்துக்காக.
. சிறந்த நடிகை: ஒலிவியா கோல்மேன் (Olivia Colman) த பேவரைட் படத்துக்காக.
. சிறந்த இயக்குனர்: அல்போன்சா குவாரன் (ரோமா)
. சிறந்த துணை நடிகை:  Regina King (If Beale Street Could Talk படத்திற்காக) 

(லேடி காகா)

. சிறந்த மேக்கப் : வைஸ் (Vice)  
. சிறந்த ஆவணப்படம்: ஃப்ரீ சோலோ (Free Solo)
. சிறந்த ஆடை வடிவமைப்பு : ருத் இ கார்டர் (Ruth E Carter) பிளாக் பாந்தர்
. தயாரிப்பு வடிவமைப்பு: ஹன்னா பீச்லர் மற்றும் ஜெய் ஹார்ட் -(பிளாக் பாந்தர்)
. ஒளிப்பதிவு: அல்போன்சா குவாரன் - (ரோமா)

(அல்போன்சா குவாரன்)

. துணை நடிகர்: மஹர்ஷாலா அலி (கிரீன் புக்)
. வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ )
. எடிட்டிங்: ஜான் ஒட்மேன் (Bohemian Rhapsody படத்துக்காக)
 சவுண்ட் எடிட்டிங்: Bohemian Rhapsody
. சவுண்ட் மிக்சிங் : Bohemian Rhapsody
. சிறந்த அனிமேஷன் படம்: ஸ்பைடர்மேன்: இன்டு த ஸ்பைடர் வெர்ஸ்
. ஆவணக்குறும்படம் : Period. End of Sentence. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி பேசும் படம் இது

. விஷூவல் எபெக்ட்: பர்ஸ்ட் மேன்

. ஒரிஜினல் திரைக்கதை: கிரீன் புக்
. தழுவல் திரைக்கதை : பிளாக்கிளான்ஸ்மேன் (BlacKkKlansman)
. பின்னணி இசை: பிளாக் பாந்தர்
. சிறந்த பாடல் : ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன் படத்துக்காக, லேடி காகா, மார்க் ரான்சன், அந்தோணி ரோஸோமண்டோ, ஆண்ட்ரூ வியாட் ஆகியோர் பாடிய பாடல்)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close