[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் பி.பி.கோவிந்தன் மரணம்

director-pp-govindan-passes-away

தேசிய விருது பெற்ற பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் பி.பி.கோவிந்தன் மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

பிரபல மலையாளப் பட இயக்குனர் பி.பி.கோவிந்தன். இவர், சரிதா, சீதா, சந்தியாவந்தனம், ஹிருதயங்களில் நீ மாத்திரம் உப்பட சில படங் களை இயக்கியுள்ளார். தமிழிலும் சில படங்களை இயக்கியுள்ளார். டீ.வி.தொடர்களையும் இயக்கியுள்ள இவர், ’மால்பரியூம் பட்டுநூலும்’ என்ற டாக்குமென்டரி படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர்.

(தேசிய விருது பெற்றபோது)

கேரள வரலாற்றைப் பேசும் 20 மணி நேர ஆவணப்படத்தையும் எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், கண்ணூரில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு நாளை காலை கண்ணூரில் உள்ள மண்டூரில் நடக்கிறது. 

மறைந்த கோவிந்தனுக்கு மனைவி ஓமனா, மகன் ரவி கல்யாண், மகள் சரிதா கல்யாண் ஆகியோர் உள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close