[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

வெளியானது ‘சூப்பர் டீலக்ஸ்’ 2வது லுக் ! - ரிலீஸ் தேதி அறிவிப்பு

vijay-sethupathi-super-deluxe-releasing-on-march-29th

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபகத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போலவே இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநரின் இரண்டாவது திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

           

இந்நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ளது. கிட்டதட்ட முதல் லுக்கில் இடம்பெற்றிருந்த அனைத்து அம்சங்களும் இதிலும் இடம்பெற்றுள்ளது. ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கிறார். சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில், மிஸ்கின் ஆகியோரின் படங்களும் அதேபோன்று இடம்பெற்றுள்ளன. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இரண்டாவது லுக், இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

          

இரண்டவது லுக் போஸ்டரில் மார்ச் 29ம் தேதி படம் வெளியாகிறது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு, நாளை ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் ரசிகர்களும், யுவன்சங்கர் ராஜாவின் ரசிகர்களும் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close