[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

பிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்கு பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி!

rana-is-doing-risky-stunts-for-prabhu-solomon-s-kaadan

பிரபு சாலமன் இயக்கும் ’காடன்’ படத்துக்காக, பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ’தொடரி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும் படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோ. மற்றும் விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்குக்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.

ராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில், சாண்டோ சின்னப்பா தேவர், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. அவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. 

(ஸ்ரேயா பில்கோன்கர்)

இந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இப்போது, பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சியை, மும்பை பிலிம்சிட்டியில் படமாக்கி வருகின்றனர். 

(பிரபு சாலமன்)

‘’இதற்காக 8 கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராணாவுடன் வில்லன்கள் மோதும் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து அவர் நடித்து வருகி றார். இதுவரை இல்லாத அளவு இந்த காட்சிகள் பேசப்படும். டெக்னிக்கலாகவும் இந்தப் படம் வேறு தரத்தில் இருக்கும்’’ என்று படக்குழுத் தெரி வித்துள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close