[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

சமூக வலைதளங்களில் வைரலாகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் புதிய செல்ஃபி புகைப்படம்

today-new-selfie-about-nayanthara-vignesh-shivn-trending-on-social-media

காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியாக இருக்கும் புதிய செல்ஃபி புகைப்படத்தை நயன்தாரா என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘மனசினகாரே’ என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையில் அறிமுகமான நயன்தாரா, கடந்த 2005ஆம் ஆண்டு ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'பில்லா', 'யாரடி நீ மோகினி', 'அறம்', 'நானும் ரவுடிதான்', 'மாயா', 'கோலமாவு கோகிலா', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். இதையடுத்து ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, ‘லவ் - ஆக்‌ஷன் - ட்ராமா’ எனப் பல படங்கள் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘Mr. லோக்கல்’ படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

 

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் வசித்து வரும் இவர்கள், ஒவ்வொரு விழாவின் போதும் புகைப்படங்கள் எடுத்து வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில்,  காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒரு புகைப்படத்தை நயன்தாரா,  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் அவர்கள் வெளியிட்டுள்ளதாக இந்தப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதுவரை ட்விட்டரில் மட்டும் 1.95 மில்லியன் ரசிகர்கள்  பின்பற்றி வருகின்றனர். இதுவரை சமூக வலைத்தளங்களில், அவர் இல்லை என்றே கூறிவந்தாலும் இதே கணக்கில் அதிக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close