[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

சவுந்தர்யா- விசாகன் திருமணம்: முதலமைச்சர் வாழ்த்து

soundarya-rajinikanth-and-vishagan-tied-knot-at-chennai-today

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா- விசாகன் திருமணம் சென்னை, எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. மணமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாழ்த்தினார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. கிராஃபிக்ஸ் டிசைனரான இவர், ‘சந்திரமுகி’,‘சிவாஜி’,‘கோச்சடையான்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய ‘வேலையில்லா பட்டதாரி’ 2017-ல் வெளியானது. இவர், தனது முதல் கணவர் அஸ்வினுடன் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார்.

இந்நிலையில், தொழிலதிபர் விசாகன் வணங்காமுடி என்பவருடன் சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 
சென்னையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். ‘வஞ்சகர் உலகம்’ படத்திலும் நடித்துள்ளார். விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

நேற்று காலை போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி நடனம் ஆடிய வீடியோ வைரலானது. முன்னதாக, ரஜினி வீட்டு முறைப்படி போயஸ் கார்டனில் நேற்றும் விசாகன் வீட்டு முறைப்படி இன்றும் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி வேலுமணி நடிகரும் கமல்ஹாசன், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close