[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

“என்னைவிட கமல் படத்திற்கே நல்ல இசையை இளையராஜா கொடுத்தார்” - ரஜினி சுவாரஸ்ய பேச்சு

rajinikanth-speech-in-illayaraja-75th-anniversary-festival

தன் படங்களை விட கமல்ஹாசன் படத்திற்கே இளையராஜா நன்றாக இசையமைத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி வருகிறது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய ரஜினிகாந்த், “கலைகளில் சிறந்த கலை இசை.இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவனுடைய ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. இளையராஜா இசையின் சுயம்புலிங்கம். முதல் படத்திலிருந்து இப்போது வரை இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தொடர்கிறது.
 தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாராட்டுகள். இளையராஜா திரைத்துறைக்காக பெரும் தியாகம் செய்தவர். என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நல்ல இசையமைத்திருக்கிறார்” என்று கூறினார்.

பின்னர், ரஜினிக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இளையராஜா, “ரஜினி இப்படிச் சொல்வார், ஆனால் கமல் கூறும்போது, ரஜினி படங்களுக்குத்தான் நல்ல இசை போடுகிறீர்கள் என்பார்” எனப் பேசினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close