[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

வெளியானது சிவகார்த்திகேயனின் 'Mr.லோக்கல்' ஃபர்ஸ்ட் லுக்! 

title-and-first-look-of-sivakarthikeyan-s-next-movie

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.  'Mr.லோக்கல்’ என்று அந்த திரைப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜேஷ். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். இந்நிலையில் இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். 

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  படத்திற்கு  'Mr.லோக்கல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.  போஸ்டரில், கையில் டீ கிளாசை வைத்துக்கொண்டு கோட் சூட், கருப்பு கண்ணாடி என  சிவகார்த்திகேயன் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். பின்னணியில் விமானம் சென்னையில் இருந்து பாரீஸ் செல்வதை குறிப்பது போல அமைந்துள்ளது. 

'Mr.லோக்கல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் MrLocal என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close