[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

2018ல் அதிகம் விரும்பத்தக்க சின்னத்திரை பெண்கள்   

most-desirable-women-on-television-2018

2018ல் சின்னத்திரையில் அதிகம் விரும்பத்தக்க சில பெண்களின் பெயர்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சீரியல் நடிகைகள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் அறிமுகத்துடன் சிறிய நேர்காணல் போல இந்தப்பட்டியல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயா அஞ்சன்

மங்களூருவைச் சேர்ந்த ஸ்ரேயா , கன்னட தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ‘திருமணம்’ நாடகத்தில் ஜனனி கேரக்டர் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆகியுள்ளார். காதல், கல்யாணம் குறித்த சிந்தனையை தான் இன்னும் தொடங்கவில்லை என்று கூறுகிறார் ஸ்ரேயா

 யாஷிகா ஆனந்த்
திரைப்படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அதிகம் அறியப்பட்டார். ஜோடி ஃபன் அன்லிமிட்டெட் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருக்கிறார். அவர் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வாணி போஜன்
‘தெய்வமகள்’ நாடகம் மூலம் தமிழகத்தின் பல குடும்பங்களுக்கு அறிமுகமானவர் வாணி போஜன்.‘கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். தற்போது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தான் செய்யும் வேலையை மட்டுமே காதலிப்பதாக தன்னுடைய காதல் ரகசியம் தெரிவிக்கிறார் வாணி போஜன்.

 நக்‌ஷத்ரா நாகேஷ்
தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர் நக்‌ஷத்ரா நாகேஷ். தற்போது நடிப்பில் கவனத்தில் செலுத்தி வரும் இவர் குறும்படங்கள் மூலம் அதிக கவனம் பெற்றார். தற்போது ல‌ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காதல் குறித்த கேள்விக்கு, தான் கனவு கண்டிருக்கும் ஆண்மகனை இன்னும் சந்திக்க வில்லை என்று கூறுகிறார் நக்‌ஷத்ரா. 

திவ்யதர்ஷினி
டிடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, சின்னத்திரைக்கு வந்து 20 ஆண்டுகாலத்தை சமீபத்தில் பூர்த்தி செய்துள்ளார். ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களிலும் முகம் காட்டுகிறார். வேலையில் பிசியாக இருப்பதால் காதல், கல்யாணம் குறித்து சிந்திக்க நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 கிகி விஜய்
நீண்ட காலமாக தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் கிகி விஜய். தற்பொது டான்ஸ் Vs டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பிசியான தொகுப்பாளினியாக இருக்கிறார். இவர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை மணந்துள்ளார். 

பாவனா பாலகிருஷ்ணன்
‘சூப்பர் சிங்கர்’ உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களை பாவனா தொகுத்து வழங்கியிருக்கிறார். நடுவே தொலைக்காட்சிகளுக்கு இடைவெளிவிட்ட இவர்  மீண்டும், ஜோடி ஃபன் அன்லிமிட்டட் ஷோ மூலம் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார். நிக்கில் என்பவரை திருமணம் செய்துள்ளார் பாவனா.

ஆல்யா மானசா
சின்னத்திரை மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் புகழ்பெற்றவர் ஆல்யா மானசா. டான்ஸ் ஷோவில் பங்கேற்பாளராக சின்னத்திரைக்குள் நுழைந்த இவர், ‘ராஜா ராணி’ நாடகத்தின் செம்பா கேரக்டர் மூலம் கவனிக்கப்பட்டார். அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து வருகிறார் ஆல்யா மானசா.

 சைத்ரா ரெட்டி
பெங்களூரு பெண்ணான சைத்ரா ரெட்டி கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். ஆனால்‘யாரடி நீ மோகினி’ நாடகம் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். தன்னை சிங்கிள் என்று கூறுகிறார் சைத்ரா.

மணிமேகலை

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மணிமேகலை. தற்போது மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளார். ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் மணிமேகலை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close