[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சவுந்தர்யா மறுமணம்: லதா ரஜினி போலீஸ் பாதுகாப்பு கோரியது ஏன்?

rajinikanth-s-wife-seeks-police-protection-for-daughter-wedding

சவுந்தர்யா ரஜினிகாந்தின் மறுமணம் நடக்க இருப்பதையொட்டி, தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு கொடுத்துள்ளார். 

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. கிராஃபிக்ஸ் டிசைனரான இவர், ‘சந்திரமுகி’,‘சிவாஜி’,‘கோச்சடையான்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய ‘வேலையில்லா பட்டதாரி’ 2017-ல் வெளியானது. இவர், தனது முதல் கணவர் அஸ்வினுடன் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார். 

இதையடுத்து, தொழிலதிபர் விசாகன் என்பவருடன் சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. வரும் 10 ஆம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் இந்த திருமணம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

சென்னையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். ‘வஞ்சகர் உலகம்’ படத்திலும் நடித்துள்ளார். விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்துள்ளார். அதில், வரும் 10 ஆம் தேதி, போயஸ் கார்டனில் உள்ள தங்கள் இல்லத்தில், மாலை 3 மணி முதல் 10 மணி வரை திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் 12 ஆம் தேதி திருமணத்துக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் மாலை 7 மணியில் இருந்து நடக்க இருப்பதாகவும் இதற்காக பல திரைபிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வர இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close