JUST IN
 • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
 • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
 • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
 • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
 • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
 • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
 • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
 • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
 • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
 • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
சினிமா 31 May, 2016 03:09 PM

தமிழ் மக்களே நான் நலமாதான் இருக்கேன்... வதந்திகள நம்பாதிங்க !

Cinque Terre

நடிகர் செந்தில் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 4-ம் தேதி மதுரை மேற்குத்தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூவை ஆதரித்து சோலைஅழகுபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள திமுக தேர்தல் அலுவலகம் அருகே பிரசாரம் செய்து கொண்டிருந்த நடிகர் செந்திலிடம் திமுகவினர், உதயசூரியன் சின்னத்தை காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினர், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவ்வழியாக வந்த திமுக வட்டச் செயலர் காவேரியின் கார் அதிமுக தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டுச் சென்றதாம். இதையடுத்து காவேரியின் வீட்டுக்குச் சென்று அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுகவினர், அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, நடிகர் செந்தில் மரணமடைந்துவிட்டதாக அப்போது வதந்தி பரப்பப்பட்டதால் தமிழ்த் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நடிகர் செந்தில் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தன்னைப்பற்றி பரபரப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கூறினார்.

இநிலையில், இன்று மீண்டும் செந்தில் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியதையடுத்து மதுரை போலீசில் புகார் அளித்துள்ளர். இது திமுகவினரின் தூண்டுதல் பேரில் நடப்பதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads