[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

விஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’

petta-vs-viswasam-box-office-collection-day-13-rajinikanth-movie-makes-more-than-double-of-ajith-overseas

உலக அளவில் ‘பேட்ட’ திரைப்படம் விஸ்வாசத்தை விட இரண்டு மடங்கு வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ம் தேதி ரஜினி காந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைபடங்கள் வெளியாகி இருந்தன. இரண்டு படங்களுக்கும் அவர்களது ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு படங்களும் வெளியானது முதல் வசூல் ரீதியான போட்டி நிலவி வருகின்றது.

                  

‘பேட்ட’ படத்தின் நிறுவனம் 11 நாட்களில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்த நிலையில், ‘விஸ்வாசம்’ தரப்பில் ரூ125 கோடி வசூல் ஆகியுள்ளதாக அறிவித்தது. இதனால், வசூல் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தமிழக அளவில் ‘பேட்ட’ படத்தை காட்டிலும் ‘விஸ்வாசம்’ அதிக வசூல் செய்துள்ளதாக அதிகப்படியான செய்திகள் வெளியாகின. அதேவேளையில், சென்னை, இந்திய அளவில் மற்றும் சர்வதேச அரங்கில் விஸ்வாசத்தை காட்டிலும் ‘பேட்ட’ திரைப்படம் வசூலில் முன்னிலை பெற்றுள்ளது.

      

தற்போது, ஜனவரி 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரையிலான 11 விடுமுறை நாட்களின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. ‘விஸ்வாசம்’ திரைப்படம் தமிழகத்தில் பேட்டையை விட சுமார் 10 கோடி அதிகமாக வசூலித்துள்ளது. அதேபோல், ‘பேட்ட’ திரைப்படம் சர்வதேச அரங்கில் விஸ்வாசத்தை விட இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளது. ‘பேட்ட’ திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ‘விஸ்வாசம்’ ரூ150 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

         

11 நாட்கள் வசூல் நிலவரம்:

சென்னை வசூல்: 

விஸ்வாசம் : ரூ10.2 கோடி
பேட்ட      : ரூ12.52 கோடி

தமிழ்நாடு வசூல்: 

விஸ்வாசம் : ரூ95 கோடி
பேட்ட      : ரூ84 கோடி

இந்திய அளவில் வசூல்:

கர்நாகா        - 9 கோடி (விஸ்வாசம்)   ரூ16.60 கோடி (பேட்ட)
கேரளா        - 3.50 கோடி (விஸ்வாசம்)  ரூ8 கோடி (பேட்ட)
இதர இந்தியா - 1.50 கோடி (விஸ்வாசம்)  ரூ4.50 கோடி (பேட்ட)

தெலுங்கு - ரூ10 கோடி (பேட்ட)

வெளிநாட்டு வசூல்:

சிங்கப்பூர் : ரூ3.83 கோடி (விஸ்வாசம்), ரூ6.38 கோடி (பேட்ட)
இலங்கை: ரூ2.50 கோடி (விஸ்வாசம்),  ரூ3.02 கோடி (பேட்ட)
மலேசியா: ரூ9.18 கோடி (விஸ்வாசம்), ரூ12.52 கோடி (பேட்ட) 

விஸ்வாசம் (11 நாட்கள்)  - ரூ33.8 கோடி
பேட்ட  (11 நாட்கள்)             - ரூ69 கோடி

ஒட்டுமொத்த வசூல்:-

பேட்ட              -  ரூ185.10 கோடி
விஸ்வாசம் -  ரூ139 கோடி

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close