[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இயக்குநராக களமிறங்கினார் நடிகர் மாதவன் !

actor-madhavan-directs-new-film

நடிகர் மாதவன்  'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' (ROCKETRY THE NAMBI EFFECT) என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்.

இஸ்ரோ ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கும் திரைப்படம்  'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்'. அவரது வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை கொண்டு உருவாகவுள்ள இத்திரைப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில், மாதவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆனந்த் மகாதேவன் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து  'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற திரைப்படத்தை நடிகர் மாதவனே இயக்கவுள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. ஏற்கெனவே கோலிவுட் உலகில் தனது க்யூட்டான சிரிப்பால் சாக்லேட் பாய் என பெண்களின் மத்தியில் பெயர் எடுத்த மாதவன் தற்போது புதிய அவதாரம் எடுப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close