[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

டெல்லியில் தமிழ் நடிகையை தாக்கி கொள்ளை: பட்டப்பகலில் தக் தக் கும்பல் கைவரிசை!

thak-thak-gang-robs-assaults-actress-in-delhi

டெல்லியில் நடிகையை தாக்கி கொள்ளையடித்துச் சென்ற தக் தக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னையை சேர்ந்தவர் நடிகை பர்ஹீன் (Farheen). இவர் பிந்தியா என்ற பெயரில், கமல்ஹாசன் ஜோடியாக ’கலைஞன்’ என்ற படத்தில் நடித் தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த அவர், பின்னர் பர்ஹீன் என்ற பெயரில், ’ஜான் தேரே நாம்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுக மானார். அங்கு நடித்து வந்த இவர், கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார்.

இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது டெல்லியில் உள்ள சர்வ்பிரியா நகரில் வசித்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

பர்ஹீன், தனது காரில் நேற்று நண்பகல் மால் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காரை பின் தொடர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல், சிக்னல் அருகே கண்ணாடியை உடைக்க முயன்றது. இதையடுத்து பர்ஹீன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஏன் இப்படி செய்தீர்கள் என் று கோபமாகக் கேட்டார்.

 ’காரை சரியாக ஓட்டத்தெரியாதா?’ என்று அவர்களை கும்பல் திட்டியது. பிறகு காரில் இருந்த பர்ஸ், மொபைல்போன்கள், சில ஆவணங்களை சுருட்டிக் கொண்டு தப்ப முயன்றது. பர்ஸில் ரூ.16 ஆயிரம் இருந்தது. ஆனால், அவர்களை தப்ப விடாமல், பர்ஹீன் மறித்து நின்றுகொண்டு, உதவிக்கு ஆட்களை அழைத்தார். உடனடியாக சுதாரித்த கும்பல், பர்ஹீனை சரமாரியாகத் தாக்கிவிட்டு சாலையின் மறுபுறத்துக்குத் தப்பியோ டியது. இதில் காயமடைந்த அவர், ரோட்டில் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த ராணுவ வீரர் ஒருவர், போலீசாருக்கு இதுபற்றி  தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பர்ஹீனிடம் விசாரித்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா உதவியோடு, தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ’தக் தக்’ கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிக்னலில் நிற்கும் கார் டிரைவர்களின் கவனத்தை திசைத் திருப் பி கொள்ளையடிப்பவர்கள். மும்பையில் இப்படி கொள்ளை சம்பவங்களை நடத்தி வந்த இவர்கள் இப்போது டெல்லியில் தங்களை கொள் ளை யை தொடர்வதாகக் கூறப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close