’ஸ்ரீதேவி பங்களா’ படம் பற்றி கேட்டதால் வெறுப்பான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பேட்டியை முடித்துக்கொண்டு வெளியேறினார்.
மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல் காட்சிகள் வைரலானது. இந்தக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், இதன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற இந்தி படத்தில் பிரியா நடித்துள்ளார். இது ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குளியல் தொட்டியில் அமர்ந்து கொண்டு பிரியா கதறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. நடிகை ஸ்ரீதேவியும் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் படம் பற்றி பிரியா வாரியர் கூறும்போது, ’’இது பெண் சூப்பர் ஸ்டார் ஒருவரின் கதை. இது யாருடைய வாழ்க்கை கதையும் இல்லை. கற்பனை கதைதான்’’ என்று தெரிவித்திருந்தார்.
படத்தின் இயக்குனர் பிரசாந்த் கூறும்போது, ’’போனி கபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ஸ்ரீதேவி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் தீவிர ரசிகன் நான். ஏன் அவர் பெயரை பயன்படுத்தக் கூடாது? அதோடு, அந்தப் பெயர், அவர் ஒருவரை மட்டும் குறிக்கவில்லை. அதே பெயரில் பலர் இருக்கிறார்கள். அதனால் நான் பெயரை மாற்றப் போவதில்லை. சட்டரீதியாக இதைச் சந்திப் பேன்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்துகொண்டார். அவரிடம் இந்த படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது இந்தக் கேள்வியால் வெறுப்படைந்த அவர், காது கேட்கவில்லை என்றார்.
மீண்டும் அந்தப் படம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவரது, ‘’போதும் எதுவும் கேட்க வேண்டாம்’’ என்று சொன்னார். இதையடுத்து எந்தப் பதிலும் சொல்லாமல், மேடை யை விட்டு சென்றார் ஜான்வி. இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்காததால், மேடையை விட்டு வெளியேறினார் என்று கூறப்படுகிறது.
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !