[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

“ஏசியில் உட்கார்ந்து ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்கள்”- பிரகாஷ் ராஜ்

politicians-are-playing-political-game-from-ac-rooms-prakash-raj

ஏசி அறைகளில் அமர்ந்த‌படி ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்கள் என பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் அவசர சட்டம் மூலம் ராமர் கோயில் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே அவசர சட்டம் குறித்து பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். “ராமர் கோயில் விவகாரத்தில் டெல்லியிலும் லக்னோவிலும் ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு அரசியல் விளையாட்டு நடத்தப்படுகிறது. அயோத்தி சாலைகளில் மக்கள் வசித்து வருவதை ஊடகங்கள் பார்க்கவேண்டும். இந்த நிலையைத்தான், ராம ராஜ்யம் கொண்டு வரப்போவதாக பேசும் கட்சிகள் விரும்புகின்றனவா?” என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.

மேலும் “அயோத்தி சாலைகளில் மக்கள் வசித்து வருவதை படம்பிடித்து காட்டுங்கள். ராம ராஜ்யம் கொண்டு வரப்போவதாக பேசும் கட்சிகள் பொய் கூறுகின்றன ” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த வருடம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரகாஷ் ராஜ், பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close