[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு!

pm-modi-to-inaugurate-india-s-first-cinema-museum-in-mumbai

மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் சினிமா மியூசியத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். 

இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் (மியூசியம்) உருவாக்கப் பட்டுள்ளது. மும்பை பெடரர் சாலையில் உள்ள 19ம் நூற்றாண்டு விக்டோரியா பங்களாவான குல்சன் மஹால் வளாகத்திலும் அதன் அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்துமாடி கட்டிடத்திலும் இந்த அருங்காட்சியகம், ரூ.140 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்திய சினிமாவின் வளர்ச்சியை, வரலாற்றை விவரிக்கும் வகையில் இங்கு பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மவுன பட காலம், பேசும் படம் உருவானது, உலகப் போர் தாக்கம், பிராந்திய மொழி படங்களில் இருந்து புதிய அலை சினிமா வரை பல்வேறு வரலாறுகள் ஒன்பது பகுதி களாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இங்கு, காந்தியும் சினிமாவும், குழந்தைகள் திரைப்பட அரங்கம், இந்திய சினிமாவில் படைப்பாற்றலும் டெக்னாலஜியும் பிராந்திய மொழி சினிமா ஆகிய நான்கு கருப்பொருள்களில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதன் திறப்பு விழா நாளை நடக்கிறது. பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close