[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாளை தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு...!

indian-2-shooting-begins-tomorrow

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. இப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. கமல் இருவேடங்களில் நடித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். இதன் வெற்றியை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலும் ‘2.0’ படத்தில் ஷங்கரும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்2’ படத்தின் பணிகள் காலதாமதமாகியது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ ‘இந்தியன் 2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே அரசியல் கட்சியை துவங்கிய கமல்ஹாசன், ‘இந்தியன் 2’தான் தன்னுடைய கடைசிப் படம் எனவும் அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் மூலம் இந்த அறிவிப்பை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கமல் வயதான தோற்றத்தில் நெஞ்சில் தேசியக்கொடியுடன் காணப்படுகிறார். இதனை ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். முன்னதாக நேற்றும் ஒரு போஸ்டர் வெளியாகியிருந்தது. அதனையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close