[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்!

it-is-a-fictitious-story-priya-prakash-varrier-on-sridevi-bunglow

’ஸ்ரீதேவி பங்களா’ பெண் சூப்பர் ஸ்டாரின் கதைதான் என்றும் நடிகை ஸ்ரீதேவியின் கதையல்ல என்றும் அதில் நடித்துள்ள பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். 

பிரியா வாரியர் நடித்த மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப் படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல் காட்சிகள் வைரலானது. விரல்களில் முத்தமிடும் காட்சிகளும் அதிகம் பரபரப்பானது. அந்த நேரத்தில் பிரியா வாரியர் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக இருந்தார். பாடல் மற்றும் அதில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றம் வரை சென்றது. அதனால், பிரியா வாரியர் நீண்ட நாள் பேசு பொருளாக இருந்தார்.

இந்நிலையில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற இந்தி படத்தில் இவர் நடித்துள்ளார். இது ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் டிரைலர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குளியல் தொட்டியில் அமர்ந்து கொண்டு பிரியா கதறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் படம் பற்றி பிரியா வாரியர் கூறும்போது, ’’இது பெண் சூப்பர் ஸ்டார் ஒருவரின் கதை. அந்த பெண் சூப்பர் ஸ்டாராக நடித்துள்ளேன். இது யாருடைய வாழ்க்கை கதையும் இல்லை. இது கற்பனை கதைதான். லண்டனில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. இந்த மாத இறுதியில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close