[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

மணிரத்னம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

aishwarya-rajesh-to-star-alongside-gv-prakash-in-mani-ratnam-s-next

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.

இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய ஜிவி பிரகாஷ் பிறகு திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். தற்போது பல படங்களில் நடித்து வரும் அவர், இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை தனசேகரன் இயக்க உள்ளார். 

பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்துக்கு ‘96’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷின் ஜோடி இல்லை என்றும், சகோதரியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும்,  நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்படவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்றது. இதனையடுத்து  அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக கூறப்படுகிறது.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close