[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

இந்தியில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகிறார் ஜீவா!

actor-jeeva-to-play-the-role-of-srikanth-in-world-cup-film-83

இந்தியில் உருவாகும் ’83' படத்தில் தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83' என்ற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ்-ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார். அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.

இதுபற்றி ஜீவா கூறும்போது, ‘’சங்கிலி புங்கிலி, கலகலப்பு 2 படங்கள் வெற்றி பெற்று கடந்த ஆண்டு எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அடுத்து நிறைய கதைகள் கேட்டேன். அதில், கொரில்லா, ஜிப்ஸி படங்களை மட்டுமே தேர்வு செய்தேன். இரண்டு படங்களும் சிறப்பாக வந்தி ருக்கிறது. தற்போது ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சூப்பர்குட் பிலிம்ஸின் 90 வது படத்தில் நானும் அருள்நிதியும் சேர்ந்து நடித்து வருகிறோம்.

இதற்கிடையே முதன் முதலாக, இந்தி படம் ஒன்றில் நடிக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணி, 1983-ல் உலகக் கோப்பையை வென்றதை மைய மாக வைத்து, "83" என்ற படம் தயாராகி வருகிறது. கபீர்கான் இயக்கும் இந்தப் படத்தில் இதில் ரன்வீர் சிங் ஹீரோ. அவருடன் நானும் நடிக்கிறேன். பிரமாண்டமான படம். நான் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். கிரிக்கெட் தொடர்பான இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

சுமார், 100 நாள் லண்டனில் ஷுட்டிங் நடக்க இருக்கிறது. அதற்கு இப்போதே தயாராகி வருகிறேன். தமிழக கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்கிறேன். அவரது கேரக்டரில் நடிப்பது எனக்கு பெருமை. லகான் , எம்.எஸ்.தோனி படங்களின் வரிசையில் ’1983 வேர்ல்ட் கப்’ படமும் இருக்கும்’’ என்கிறார் ஜீவா. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close